காய்கறி பச்சடி

width="200"


தேவையானப்பொருட்கள்:
 
வெள்ளரிக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
காரட் - 1
கொத்துமல்லி இலை - சிறிது
பச்சைமிளகாய் - 2 
உப்பு - ருசிக்கேற்றவாறு
தயிர் - ஒரு பெரிய கிண்ணம்
 
செய்முறை:
 
* வெள்ளரியின் தோல் மற்றும் விதைப்பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 
* காரட்டின் தோலை சீவி விட்டு, வெள்ளரித்துண்டின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும்.
 
* தக்காளியை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதை மற்றும் சாறு ஆகியவற்றை நீக்கி விட்டு மற்ற காய்களின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும்.
 
* பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும்.
 
* கொத்துமல்லியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
* தயிரை நன்றாகக் கடைந்து அத்துடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். கடைந்த தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள காய்களை சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
 
* சுவையான தயிர் பச்சடி தயார்.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India