சவ்சவ் கூரா

width="200"


தேவையான பொருட்கள்......
 
சவ்சவ் - 1
பொட்டுக்கடலை - 1 கப்
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
வர மிளகாய் - 3
கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை.... 
 
* சவ்சவ்வை தோல் நீக்கி கழுவி உள்ளேயிருக்கும் கொட்டையை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 
* வாணலியில் சவ்சவ்வைப் போட்டு 1/2 கப் தண்ணீர்விட்டு வேகவிட்டு தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 
* பொட்டுக்கடலையுடன், தேங்காய் துருவல், வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
 
* சவ்சவ்வுடன், இந்த மாவுக்கலவை, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
 
* வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சூட்டோடு சவ்சவ்வில் கொட்டிக் கிளறி விடவும்.
 
* சுவையான, செய்ய சுலபமான சவ்சவ் கூரா ரெடி.



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India