கொத்தமல்லி துவையல்

width="200"

தேவையான பொருட்கள்:-
 
 
கொத்த மல்லி- ஒரு கட்டு.
உளுந்த பருப்பு- 1 ஸ்பூன்.
வர மிளகாய்- 2 (காரத்திற்கு தகுந்தமாதிரி எண்ணிக்கை).
புளி- சிறிய நெல்லி அளவு.
உப்பு- சுவைக்கு ஏற்றவாறு.
எண்ணெய்- 2 ஸ்பூன்.
 
செய்முறை
 
* கொத்த மல்லியை அலசி சுத்தம் செய்துவிட்டு, இலைகளை மட்டும் தனியாக கிள்ளி வைக்கவும். பின் தண்டுகளை மிக சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
 
* அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்தவுடன் (வெறும் கடாயில்), வர மிளகாய், உலுந்து இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து எடுக்கவும்.
 
பின் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய தண்டு, மற்றும் ஆய்ந்து வைத்துள்ள இலைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக 2 நிமிடம் வதக்கி, தனித்தனியாக வைக்கவும்.
 
* மிக்ஸியில் வரமிளகாய், உலுந்து இவைகளை முதலில் அரைத்துவிட்டு, பின் தண்டை சேர்த்து, தேவையான அளவு உப்பு  சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். பின் இலைகளையும் புளியையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
 
* விருப்பப்பட்டால் கடுகு தாளித்து கொட்டவும். சுவையான துவையல் தயார்.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India