கொள்ளு ரசம்

width="200"


தேவையான பொருட்கள்:
 
கொள்ளு வேகவைத்த தண்ணீர் - 3 கப்
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது)
புளிக்கரைசல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
மல்லித்தளை- தேவையான அளவு
பூண்டு - 3 பல் (தட்டி கொள்ளவும்)
கடுகு - 1  ஸ்பூன்
எண்ணெய் - 1  ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
பொடிக்க:
 
சீரகம் - 1டேபிள்ஸ்பூன்  
மல்லி - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 4
 
* பொடிக்க உள்ள பொருட்களை நைசாக பொடித்துக் கொள்ளவும்.  
 
செய்முறை:
 
* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
 
* பின்னர் தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
 
* நன்கு வதங்கியதும் அதில் புளிக்கரைசல் மற்றும் ரசப்பொடி , உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
 
* பிறகு கொள்ளு வேக வைத்த தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். கடைசியாக கொத்தமல்லி தழை சேர்க்கவும்.  



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India